மனதை மயக்கும் மண்டேலா படத்தின் திரை விமர்சனம்

யோகி பாபு, சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, ஷீலா நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ள படம் மண்டேலா.

இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். வித்யு அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 4 ம் தேதி வெளியாகி உள்ளது . சினிமா வட்டாரங்களுக்கு சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூரங்குடி என்கிற ஒரு கிராமம், அது வடக்கூர் – தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில் தலைவருக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற, அந்த ஊர் மக்களால் ஒடுக்கப்பட்டுள்ள சிகை அலங்காரம் செய்யும் நெல்சன் மண்டேலா (யோகிபாபு), யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் ஒருவராக மாறுகிறார். மண்டேலாவின் ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் வெற்றி பெற்றது யார்? என்பதை வைத்து மீதமுள்ள கதை சுவாரசியமாக நகர்கிறது.

குறும்படங்கள் இயக்கி வந்த மடோன் அஷ்வின் மண்டேலா படத்தின் மூலம் பெரிய திரையில் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே தனது தெளிவான சிந்தனைகளின் மூலம் கவனிக்க வைக்கிறார். தற்போது நடந்து கொண்டுள்ள அரசியல் சூழலை நம்மிடையே திணிக்காமல் கதையோடு இயல்பாக கொண்டு சென்று சிந்திக்க வைக்கிறார்.

மொத்தத்தில் தான் சொல்ல வந்ததை மிக கச்சிதமாக சொல்லியுள்ளார். இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு பிரமாதமான தொடக்கமாக அமைந்துள்ளது.மண்டேலா படத்தை பார்த்த பலரும் #Mandela வை டிரெண்ட் செய்து வருகின்றனர். பல மீம் கிரீயேடர்கள் கண்டிப்பாக இந்த படத்தின் பல வசனங்களை இனி பயன் படுத்தலாம் .

நெல்சன் மண்டேலாவாக கதையில் வரும் நடிகர் யோகிபாபு வழக்கம் போல நகைச்சுவை காட்சிகளில் எந்த வித குறையும் இல்லாமல் நடித்துள்ளார். ஹீரோவாக இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி பக்காவாக நடித்துள்ளார். யோகிபாபுவிற்கு இந்த படம் ஒரு மைல்கல்லாக அமையும். கண்டிப்பாக பல விருதுகளை இந்த படத்திற்காக யோகிபாபு வெல்வார் என எதிர்பார்க்கலாம்.

சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கிராமத்து களத்திற்கு ஏற்றார் போல நடித்து ஷீலா ராஜ்குமார் கவனிக்க வைக்கிறார். எந்த கதாபாத்திரமும் தேவையில்லாமல் தோன்றியது போலில்லாமல் சரியான பங்களிப்பையே வழங்கியுள்ளனர். “இதுக்கு ஒரு வழி உண்டு ” என்று அடிக்கடி இந்த வசனத்தை சொல்லி நம்மை மிகவும் சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்து உள்ளனர் .

காசு வேண்டாம் என்று பல காட்சிகளில் சொல்லும் கல்கி கலக்கல் ஆக்ட்டிங் . கக்கூஸ் பிரச்சனை கிராமத்து பெண்களின் கஷ்டம் என்று சரண்யா ரவியின் நடிப்பு அழகு . ஜி.எம்.சுந்தர் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை நேசிப்பவர் ,அப்படி பட்ட நடிகனுக்கு இந்த படம் ஒரு நல்ல தீனி . கிர்தாகான் என்று யோகிபாபுவுடன் ட்ராவல் செய்யும் சிறுவன் சில்மிஷம் சூப்பர் .

படத்திற்கு பரத் சங்கரின் இசை பக்கபலமாக அமைந்துள்ளது. மண்டேலாவின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பின்னணி இசையமைத்துள்ளார் பரத் சங்கர். ஒளிப்பதிவாளர் வித் அய்யண்ணா அந்த கிராமத்தை நேர்த்தியாக படம்பிடித்துள்ளார். வசனங்கள் பாராட்டிற்குரியது. அங்கங்கே கதையிலன் வேகம் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

யோகி பாபு எத்தனயோ படங்கள் நடித்து இருந்தாலும் பல வகையான கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் ,அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இந்த படம் யோகிபாபு வாழ்வில் அமைந்து உள்ளது . இதுவரை யோகோபாபுவை இப்படி அற்புதமாக மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தி வெற்றி பெட்ற இயக்குனர்கள் மிக குறைவு .

மீண்டும் கண்டிப்பாக யோகி பாபுவும் இயக்குனர் அஸ்வினும் மீண்டும் ஒரு முறை நல்ல கதை திரைக்கதையுடன் நம்மை மகிழ்விப்பர் என்று மிகவும் எதிர் பார்க்க படுகிறது . இந்த படத்தில் ஷீலாவின் ஒற்றை வெள்ளை முடிக்கு டை அடிக்கும் காட்சி , கேமரா ஆங்கிள் கதாபாத்திரத்தின் அழுத்தம் என அனைத்தும் மிகவும் பாராட்டத்தக்கது .

எந்த ஒரு படமாக இருந்தாலும் முதல் பதினைந்து நிமிடத்தில் ரசிகர்களை சந்தோஷ படுத்தி ஆச்சர்ய படுத்தி மகிழ்விக்கிறதோ அந்த படங்கள் தான் மிகவும் எழிதில் ரசிகர்களை முழு படமும் உட்கார வைக்கும் .அந்தஃபார்முல்லா தெறித்து பக்கா ஸ்க்ரீன் பிலே செய்து உள்ளார் இயக்குனர் . படத்தின் மிச்சம் பார்க்கும் ஆர்வம் முதல் 15 நிமிடத்தில் மிகவும் நேர்த்தியாக நம் ஆசையை தூண்டுகிறது .

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடக்கவிருக்கும் இவ்வேளையில் மண்டேலா திரைப்படம் வெளியாவது படம் பார்க்கும் வாக்காளர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையிலும் ஓட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்த கூடிய வகையிலும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படம் ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அதைத்தொடர்ந்து அன்றிரவு Netflix OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவுள்ளது. சமூகத்தின் தேவை அறிந்து சரியான நேரத்தில் மிக சரியான தருணத்தில் ரீலீஸ் ஆன படம் என்று சொன்னால் மிகை ஆகாது .

தியேட்டரில் வரவில்லை என்பது மட்டுமே ஒரு மிக பெரிய வருத்தம் . இருப்பினும் இது போன்ற படங்களை கண்டிப்பாக சிறிது காலம் கழித்து தேர்தல் நேரங்களில் கண்டிப்பாக திரைஅரங்கங்களில் ரீரீலீஸ் செய்யலாம் . குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல பாடமாகவும் , படமாகவும் இயக்குனர் வென்று உள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *