நிர்வாணமாக பெண் சடலம்.. சிதறி கிடந்த ஜீன்ஸ், டாப்ஸ்.. டாஸ்மாக் எதிரே.. ஷாக்!

காப்புக் காட்டுக்குள் ஒரு பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்ததுமே அலறி அடித்து கொண்டு ஓடினர் ஆடு மேய்த்தவர்கள்.இந்த கொலைதான் திருவண்ணாமலையை நடுங்க வைத்து வருகிறது! திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் என்ற பகுதி உள்ளது.இங்குள்ள கொண்டத்திலிருந்து சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.. இந்த டாஸ்மாக் எதிரேதான் ஒரு காப்பு காடு இருக்கிறது. இந்த காட்டில் இருந்து துர்நாற்றம் வீசி கொண்டே இருந்தது.. அந்த பகுதியில் ஆடு மேய்க்க சிலர் சென்றிருக்கிறார்கள்.

அப்போதுதான், நாற்றம் தாங்காமல் உடனடியாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையை ஆரம்பித்தனர்.. அங்கு ஒரு பெண் சடலமாக கிடந்தார்.. கிட்டத்தட்ட 30 வயதிருக்கும்.. சடலமும் அழுகி கிடந்தது.. உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக கிடந்தார்.. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட தகராறால் அவரை மர்மநபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன், காமவெறியன் உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஏனென்றால், பெண்ணின் உடல் பாகங்களில் பல்லால் கடித்த தழும்புகளும், அதற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. இதையடுத்து, மாவட்ட எஸ்பி அரவிந்த்¸ கூடுதல் எஸ்பி அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்… உடனடியாக கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.,. அந்த நாய், பெண்ணின் சடலத்தை மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடிநின்றுவிட்டது.. பெண்ணின் பிணம் கிடந்த இடத்தில் அவரது ஜீன்ஸ் பேண்ட், டாப்ஸ் விழுந்து கிடந்தன.. அவைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. இந்த பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரங்கள் தெரியவில்லை… கொலை சம்பந்தமாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த இடம் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள காப்புக்காட்டில் நடந்துள்ளதால், குடிகாரர்கள் யாராவது, குடித்துவிட்டு, போதையில் பெண்ணை கற்பழித்து கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதனால் அந்த டாஸ்மாக்குக்கு யாரெல்லாம் வந்து போனார்கள் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ரொம்ப நாட்களாகவே கோரிக்கை விடுத்து வந்துள்ளார்களாம். ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி கொண்டு, அந்த காப்பு காட்டுக்குள் சென்று பலர் குடிக்கிறார்களாம்.. பிறகு அங்கேயே அந்த பாட்டில்களையும் பிளாஸ்டிக் டம்ளர்களையும் வீசிவிட்டும் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.. இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டும், அந்த புகார் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லைஎன்கிறார்கள் அந்த பகுதி மக்கள். காப்புக் காட்டில் படுபயங்கரமாக பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை திருவண்ணாமலை பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *