“தங்கச்சி” முறை 10 வயசு பிஞ்சு வேற ஒதுக்குப்புறத்தில் நடந்த கொடுமை!டிரைவரை தட்டிதூக்கிய போலீஸ்

தங்கச்சி அதாவது பெரியம்மா மகளையே நாசம் செய்துவிட்டார் அந்த கார் டிரைவர்.. இத்தனைக்கும் அந்த தங்கைக்கு வயது வெறும் 10தான்..! மதுரையை சேர்ந்தவர் ராஜா… இவர்தான் அந்த கார் டிரைவர்.. ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது பெரியம்மா மகளுக்கு 10 வயதுதான் ஆகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொடுமை நடந்துள்ளது.. கூல்டிரிங்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, தங்கச்சியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அன்னைக்கு முழுக்க அந்த குழந்தை வீட்டுக்கு வரவே இல்லை.. ராஜா மட்டும்தான் வந்தார்.. இதனால், ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர்.. அதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளார். உன்கூட தானே பைக்கில் கூட்டி சென்றாய் என்று கேட்டதற்கும் அவர் மழுப்பலான பதிலை சொல்லி இருக்கிறார்.

இதனால், அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், ராஜா மீது அவனியாபுரம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் ராஜாவை அழைத்து விசாரித்தனர்.. போலீசாரிடமும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார் ராஜா… இதனிடையே, போலீசாருக்கு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஸ்டேஷனில் இருந்து ஒரு போன் வந்தது.

அதில், காரியாபட்டி புறநகர் பகுதியில் ஒரு சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட அந்த பகுதி மக்கள் குழந்தையை தங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்ததாகவும் சொன்னார்கள். அப்போதுதான், அந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.. குழந்தைக்கு ஜூஸ் வாங்கி தருவதாக சொல்லி பைக்கில் அழைத்து ராஜா, அந்த ஜூஸில் மயக்க மாத்திரைகளை கலந்து தந்துள்ளார்.

மயங்கிகிடந்த சிறுமியை காரியப்பட்டியில் உள்ள ஒரு ஆள் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்… அங்கு பாதி மயக்கத்தில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வலி தாங்காமல் சிறுமி விழித்துக்கொள்ளவே பதறிப்போய் உள்ளார் ராஜா.. தங்கையை அங்கேயே விட்டுவிட்டு அவனியாபுரத்துக்கு வந்துள்ளார்.. அப்பகுதியில் கதறி அழுது கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து காரியாபட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், அவனியாபுரம் போலீசார் சிறுமியை மீட்டனர், வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.. ராஜா மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. தங்கை முறை கொண்ட குழந்தையை அண்ணனே கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *