பலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு; எனக்கு அதுதான் தொழில்! அஜித் அறிக்கை

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் ‘வலிமை’என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் முருக கடவுள் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரிடமும் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்தனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்.

பிப்ரவரி 15-ம் தேதிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என சமீபத்தில் தெரிவித்திருந்த போனி கபூர் முதல்முறையாக ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து தல அஜித் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *