இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க!

பெண் பார்க்க ஆரம்பித்த உடனே, ஜாதகத்திற்கு முன்னாள் பயோடேட்டாவில் பொண்ணுக்கு சொத்து பத்து எவ்வளோ இருக்கிறதென்று செக் பண்ணுவது பேஷனா போச்சு. ஒரே பொண்ணா இருக்கணும், கூட பிறந்த தங்கச்சிகள் அதிகம் இருக்கக் கூடாது, அப்படி தங்கசிகள் இருந்தால் மூத்த பெண்ணாக இருக்கக்கூடாது, அப்பப்பா! எவ்வளவு கண்டீசன் பாருங்க.

ஏதோ இவங்க பெண்ணை கட்டிய பிறகு, பெண் வீட்டை மொத்தமா தூக்கி நிறுத்துவது போல சீன் போடுவாங்க. இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்ணின் மன நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

அதிலும் பெண் தேடும், ஆணின் குடும்பம் வீட்டில் ஒரே பிள்ளையா இருக்கிற மாதிரி தேடுவது எல்லாம் எச்சத்தனம். பையனுக்கு சம்பாரிக்க துப்பில்லையா என்ன? இப்படி வரன் பார்க்கும் போது, பையன் வீட்டு சைடில் செய்யும் தவறுகளால், அப்பா, அம்மா இல்லாத பெண்களுக்கு திருமணம் நடப்பதே பெரும்பாடா இருக்கு. உறவினர்கள் தயவில் வளர்ந்த பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால், பல அவமானங்களை கடந்து வர வேண்டும்.

மீறி ஒரு சில வரன்கள் வந்தாலும், ஏதோ வாழ்க்கை கொடுக்க வந்தவர்கள் போல, அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுவாங்க. அவங்க வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்து, கல்யாணம் கட்டிக்கிட்டு போற மாதிரி கேள்வி கேட்பாங்க.

சொந்த பந்தம் அதற்கும் மேல், இரண்டாம் தாரம் கேட்கும் ஜாதகங்களை கொண்டு வருவாங்க. அப்படியும் இல்லைனா, 19 வயசு பெண்ணுக்கு, 38 வயது பெரியவரை கொண்டு வந்து கட்டிவைக்கப் பார்ப்பாங்க. அம்மா, அப்பா இல்லாத பெண்கள் இதையெல்லாம் தாண்டி வர வேண்டி இருக்கு.

திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். பணம் கூட சம்பாரித்து விடலாம் அன்பை பெறுவது கடினம். அந்த அன்பு சிலருக்கு கிடைக்கும், பலருக்கு கிடைக்காமலே போய்விடும்.

பணத்தை பார்த்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை முழுக்க அடிமையாக வாழும் பல ஆண்களை பார்த்திருக்கிறேன். அம்மா, அப்பா இல்லாமல் வளர்ந்த பெண்களிடத்தில் அன்பு என்பது அனாதை. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மாதிரியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், அவர்களின் உலகமே நீங்கள் மட்டும் தான்.

அதற்காக உங்கள் இஷ்டத்துக்கு அவளை வழிநடத்தக்கூடாது. அவளுக்கான மரியாதையும் மதிப்பும் தாருங்கள். அன்பும் இருக்கவேண்டும் அங்கு அரவணைப்பும் இருக்கவேண்டும். உங்கள் மனைவியை பொறுத்தவரையில் அவர் உங்களிடம் மிகவும் அன்புள்ளவராக நடந்துகொள்வார்.

அந்த பெண்ணிற்கு இனி எல்லாம் நீங்கள் தானே என்ற எண்ணம் வந்துவிடும். ஒரு சிறு கோபம் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது, குழந்தை போல கவனித்துக்கொண்டால், திரும்ப கிடைக்கும் அன்பு உலகில் வேறெங்கிலும் கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *