ரஜினியின் அரசியல் முடிவில் திடீர் மாற்றம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலை கரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்ரஜினியின் இந்த முடிவை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் வரும் பத்தாம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரிஷிகேஷை சேர்ந்த நமோ சாமி என்பவர் ரஜினியை சந்தித்துள்ளார் அப்போது அவர் நீங்கள் அரசியலில் இருந்து பின்வாங்குவது சரியாக இருக்காது அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஏற்படும் பலன்களை பட்டியலிட்டதாகவும் இதன் பின்னர் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் மீண்டும் ஆலோசனை செய்ய ஆரம்பித்து இருப்பதாகவும், நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ரசிகர்கள் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தகவலும் ரஜினியை எட்டியுள்ள நிலையில் விரைவில் ரஜினியிடமிருந்து அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது