தல அஜித் இந்த நியூஇயர் இரவை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் ஈடு இணை அற்ற நடிகர் எந்த நடிகருக்கும் இல்லாத பிரமாண்ட ரசிகர் வட்டத்தை கொண்டவர்.

பொதுவாக திருவிழா நாட்களில் பிரபலங்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அதுவும் அஜித் பற்றி தெரிந்தது கொள்ள பிரபலங்கலே ஆசைப்படுவார்கள்.

இப்போது நடிகர் அஜித் நியூஇயரை எப்படியெல்லாம் கொண்டாடினார் என்ற விஷயம் வெளிவந்துள்ளது.இதுகுறித்து நடன கலைஞர் மைக்கேல் தனது சமூக வலைதளத்தில், இந்த மாதிரி நியூஇயர் கொண்டாடியதே இல்லை. சரியாக 12 மணிக்கு தலயை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினேன்.

படப்பிடிப்பு தளத்தில் ஆலுமா டோலுமா பாடல் போட தல ஆடினதும் அவருடன் பக்கத்தில் ஆடினது எல்லாம் வேறலெவல் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *