இரண்டு விதமாக மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்யின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் பெரிய நடிகரின் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

அதேசமயம் திரையரங்கில் 100% அனுமதி தருமாறு விஜய் முதலமைசரிடம் கோரிக்கை வைத்தது மிகப்பெரும் சர்சையை உருவாக்கியுள்ள நிலையில் 100% அனுமதி என்பது கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, விஜய் அவர்களிடம், இசையோடு மற்றும் இசை இல்லாமல் இரண்டு விதமாக மாஸ்டர் படத்தை திரையிட்டு காட்டியதாகவும் அதை இரண்டையுமே பார்த்த விஜய் படம் சூப்பராக வந்திருக்கிறது என்று கூறியதாகவும் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.